Home
Mobile

பல ஸ்மார்ட்போன்களை பின்னுக்கு தள்ளும் அம்சங்களுடன் அசுஸ் சென்போன் 5.!

ஒரு அட்ரெனோ 509 ஜிபியூ உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி கொண்டு இயங்கும் சென்போன் 5 ஆனது ஒரு 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் மாடல்களில் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாட்டில் வாங்க கிடை

By Muthuraj

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) நடந்து முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்ச்சியில் அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 5இசெட், சென்போன் 5 மற்றும் சென்போன் 5 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அஅறிவிக்கப்பட்டது. அவைகளில் சென்போன் 5 மட்டும் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.

பல ஸ்மார்ட்போன்களை பின்னுக்கு தள்ளும் அம்சங்களுடன் அசுஸ் சென்போன் 5.!

அம்சங்களை பொறுத்தவரை, அசுஸ் சென்போன் 5 ஆனது ஒரு 19.29 என்கிற திரை விகிதம் கொண்ட 6.2 இன்ச் முழு எச்டி + (1080x2246 பிக்சல்கள்) காடிஸ்பிளே கொண்டுள்ளது. இது பல தொலைபேசிகள் விட மிகவும் உயரமானது ஆனால் 19.5: 9 என்கிற திரை விகிதம் கொண்ட ஐபோன் எக்ஸ்-ஐ விட உயரமானது அல்ல.

ஒரு அட்ரெனோ 509 ஜிபியூ உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி கொண்டு இயங்கும் சென்போன் 5 ஆனது ஒரு 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் மாடல்களில் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாட்டில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

பல ஸ்மார்ட்போன்களை பின்னுக்கு தள்ளும் அம்சங்களுடன் அசுஸ் சென்போன் 5.!

ஒரு டூயல் பின்புற கேமரா அமைப்பை - 12 மெகாபிக்சல் மற்றும் 8 எம்பி சென்சார்கள் - கொண்டுள்ளது. இதன் முதன்மை சென்சார் ஆன 12 எம்பி, எப் / 1.8 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு சோனி IMX363 சென்சார் ஆகும். மறுகையில் உள்ள 8 மெகாபிக்சல் சென்சார் ஆனது எப் / 2.2 துளை கொண்ட ஒரு 120 டிகிரி வைட்-அங்கிள் லென்ஸ் ஆகும். முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான, நிறுவனத்தின் சென்யூஐ 5.0 கொண்டு இயங்கும் சென்போன் 5 ஆனது ஒரு 3300 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. உடன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி5.0, NFC, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 5 to launch in China on April 12. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X