அசுஸ் சென்போன் 4 தொடர் : எப்போதுதான் வெளியாகும்.?

|

கடந்த மே மாதம் நிகழ்ந்த கம்ப்யூடெக்ஸ் 2017 நிகழ்வில் அசுஸ் நிறுவனம் அதன் சென்போன் 4 தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிடவில்லை. இதன் மூலம் நிறுவனம் தனது பிரதான ஸ்மார்ட்போன்களுக்கான காலக்கெடுவை தவறவிட்டுள்ளது தெளிவாகிறது.

அசுஸ் சென்போன் 4 தொடர் : எப்போதுதான் வெளியாகும்.?

முந்தைய ஊகங்கள் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் எப்போதாவது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அது நடக்காது என்பது போல் தெரிகிறது. டிஜிடைம்ஸ் தளத்தில் இருந்து வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கையின் கீழ் சென்போன் 4 தொடரின் தொடக்கம் ஜூலையில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அசுஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி ஷென், ஜூன் மாத முடிவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்போன் 4 தொடர் தொடங்கப்படுகிறது என்று கூறியுள்ளதின் கீழ் பார்த்தால் அசுஸ் ஸ்மார்ட்போன்களின் திறனாய்விற்காக மூன்று மாதங்களுக்கு வெளியீட்டை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது தெரிகிறது, இதன்கீழ் ஸ்மார்ட்போனின் அம்சங்களுக்கான மேம்பாடு மற்றும் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்களை நிறுவனம் கொண்டு வரலாம்.

சென்போன் 4 ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கருவி ஒரு அறியப்படாத திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம். மேலும் அதன் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் 500 அமெரிக்க டாலர்கள் என்ற நிர்ணயத்தை பெறலாம். அதாவது சந்தையில் ஒரு மிட் ரேன்ஜ் பிரிவில் களம் காணும்.

மேலும், வெவ்வேறு அளவுகள் கொண்ட புதிய வகைகள் பின்னர் வெளியிடப்பட உள்ளன. முழுத் தொடரின் விவரங்களும் இப்போது குறைவாகவே உள்ளன. அசுஸ் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் சென்போன் 4 வெளியீடு மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வணிகமானது, இந்த ஆண்டின் முதல் பாதியில் முக்கிய நிகர இயக்க இழப்புக்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டில் சென்போன் 5 அறிமுகமாகும் என்றும் அக்கருவி பார்சிலோனாவில் நிகழும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2018-இல் அறிவிக்கக்கூடிய திட்டங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன.

மறுபக்கம் சென்போன் ஏஆர் - கூகுள் டாங்கோ ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 14-ஆம் தேதி முதல் சந்தையில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus ZenFone 4 smartphones launch delayed until the end of July. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X