13எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4 செல்பீ லைட்.!
இக்கருவி ஆக்டோ-கோர் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
ஆசஸ் நிறுவனம் இப்போது புதிய சென்போன் 4 செல்பீ லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த சென்போன் 4 செல்பீ லைட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் டீப்சா பிளாக், புதினா பசுமை, பிங்க், மற்றும் சன்லைட் தங்க நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்போன் 4 செல்பீ லைட்:
சென்போன் 4 செல்பீ லைட் பொதுவாக 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிவளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
இக்கருவி ஆக்டோ-கோர் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
சென்போன் 4 செல்பீ லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications