லீக்ஸ் அம்சங்கள் & விலை : அசுஸ் சென்போன் 4 செல்பீ லைட்.!

|

அசுஸ் சென்போன் 4 தொடரில் ஒரு புதிய மாறுபாடு மலேசிய வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் சென்போன் 4 செல்பீ லைட் என்று அழைக்கப்படுகிறது.

லீக்ஸ் அம்சங்கள் & விலை : அசுஸ் சென்போன் 4 செல்பீ லைட்.!

கூறப்படும் இந்த அசுஸ் ஸ்மார்ட்போன் மலேசியாவிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்றும் சுமார் ரூ.13,450/- என்ற விலை நிர்ணயம் கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சன்லைட் கோல்ட் மற்றும் டீப்-கட் பிளாக் ஆகிய வண்ண மாதிரிகளில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றிய வார்த்தைகள் இல்லை.

16 எம்பி கேமரா

16 எம்பி கேமரா

ஒரு கசிந்த புகைப்படத்தின் படி, சென்போன் 4 செல்பீ லைட் ஆனது முன் மற்றும் பின்புறம் 16 எம்பி கேமரா கொண்டுள்ளது. மேலும் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 செயலி, 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளடக்க ஆண்ட்ராய்டு 7.0 ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது

சென்போன் 4 வரிசை

சென்போன் 4 வரிசை

அசுஸ் சமீபத்தில் தைவானில் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சென்போன் 4 வரிசையில் ஸ்மார்ட்போன்களை - சென்போன் 4, சென்போன் 4 ப்ரோ, சென்போன் 4 செல்பீ மற்றும் சென்போன் 4 செல்பீ ப்ரோ - அறிமுகப்படுத்தியது.

சர்வதேச விலை

சர்வதேச விலை

சென்போன் 4, சென்போன் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே சுமார் ரூ.25,490/- மற்றும் ரூ.38,270/- என்ற சர்வதேச விலை நிர்ணயத்தை பெறலாம் இந்த ஸ்மார்ட்போன்களின் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஸ்னாப்ட்ராகன் 835 சிப்செட்

ஸ்னாப்ட்ராகன் 835 சிப்செட்

விலையுயர்ந்த மாறுபாடான சென்போன் 4 ப்ரோ ஆனது 2.5 டி வளைந்த கண்ணாடி கொண்ட 5.5 அங்குல அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 சிப்செட் உடனான 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

12 எம்பி மற்றும் 16 எம்பி சென்சார்கள்

12 எம்பி மற்றும் 16 எம்பி சென்சார்கள்

மேலும் சென்போன் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, ஓஐஎஸ் (ஒளியியல் பட உறுதிப்படுத்தல்), லேசர் ஆட்டோ போகஸ் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் போன்ற அம்சங்கள் கொண்ட 12 எம்பி மற்றும் 16 எம்பி சென்சார்கள் பின்புற பக்கத்தில் இரட்டை கேமரா அமைப்பும் முன்பக்கம் ஒரு 8எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

3600எம்ஏஎச் பேட்டரி

3600எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்ட் நௌவ்கட் 7.0 மற்றும் 3600எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த தா ஸ்மார்ட்போன், ப்ளூடூத் வி5.0, என்எப்சி, யூஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட், முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை ரீடர் மற்றும் டூயல் ஸ்பீக்கர் ஆகியவற்றுக்கான ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 4 Selfie Lite spotted in Malaysia, expected to be priced at $210. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X