அட்டகாசமான ஆசஸ் சென்போன் 3 ஜூம் ஆகஸ்ட் மாதம் வெளீயிடு.!
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப் டிராகன் 625 செயலி மற்றும் அட்ரீனோ 506 கிராபிக்ஸ் அலகு.இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசஸ் நிறுவனம் ஆசஸ் சென்போன் ஏஆர் எனும் புதிய மாடலை விற்ப்பனைக்கு கொண்டுவந்தது இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் ஆசஸ் சென்போன் 3 ஜூம் எனும் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போது வந்துள்ள ஆசஸ் சென்போன் ஏஆர் விலைப் பொருத்தவரை ரூ.49,999ஆக உள்ளது.

ஸ்னாப் டிராகன் 625
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப் டிராகன் 625 செயலி மற்றும் அட்ரீனோ 506 கிராபிக்ஸ் அலகு.இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதுஇ அதன்பின் 1080 வீடியோ பிக்சல் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3/4ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 3/4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் 32/64/128 ஜிபி மெமரி திறமையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா:
ஆசஸ் சென்போன் 3 ஜூம் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.11, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ஆசஸ் சென்போன் 3 ஜூம் பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி ஆதரவு. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications