தலைவன் வேற ரகம்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5500mAh பேட்டரி.. 65W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒரு ஸ்மார்ட்போனை பார்த்தே அந்த மாடலில் என்னென்ன பீச்சர்கள் இருக்கிறது என்பதை சொல்வது சிரமமாகத்தான் இருக்கும். ஏனென்றால், சில ஸ்மார்ட்போன்கள் பார்ப்பதற்கு பிரீமியமாக இருக்கும், ஆனால், பீச்சர்கள மொக்கையாக இருக்கும். அதுவே சில போன்கள் பார்ப்பதற்கு சுமாராக இருக்கும், ஆனால், அதன் பீச்சர்கள் பிரீமியமாக இருக்கும். இந்த ஆசுஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் 2ஆவது வகை ஸ்மார்ட்போனாகும். டிஸ்பிளே, பேட்டரி, ரேம் மற்றும் சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.
ஆசுஸ் ஜென்போன் 12 அல்ட்ரா அம்சங்கள் (ASUS Zenfone 12 Ultra Specifications): இந்த ஆசுஸ் போன் பர்ஃபாமென்ஸில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் எலைட் எஸ்ஓசி (Octa Core 3nm Snapdragon 8 Elite SoC) சிப்செட்டை கொடுக்கிறது. லேட்டஸ்ட் யுஐ கொடுக்க ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஜென் யுஐ (Zen UI) பேக் செய்யப்பட்டுள்ளது.

அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சாம்சங் ஈ6 (Samsung E6) டிஸ்பிளே பேனல் கிடைக்கிறது. 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆனால் கேமிங் பூஸ்ட் கொடுக்க 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மோட் கிடைக்கிறது.
சன் லைட்டிலும் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜென்போன் 12 அல்ட்ராவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.
கேமராவில் அல்ட்ரா ஸ்டெடி அவுட்புட் கொடுக்க 6-ஆக்சிஸ் கிளிம்பல் ஸ்டெபிலைசேஷன் (6 Axis Gimbal Stabilization) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் சோனி எல்ஒய்டிஐஏ 700 (Sony LYTIA 700) சென்சாரும் கிடைக்கிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 3X ஆப்டிகல் மற்றும் 30X டிஜிட்டல் ஜூம் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ உள்ளது.
இதில் டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஆசுஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ஏஐ போர்ட்ராய்டு வீடியோ, ஏஐ கால் டிராஸ்லேட்டர், ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பேட்டரி சிஸ்டமும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்றபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, குயிக் சார்ஜ் 5.0 (Quick Charge 5.0) மற்றும் பிடி சார்ஜிங் (PD Charging) சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 65W ஹைப்பர் சார்ஜ் (Hyper Charge) மற்றும் 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள், இன்டிஸ்பிளே சென்சார் மற்றும் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
எபோனி பிளாக் (Ebony Black), சகுரா ஒயிட் (Sakura White) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இப்போது தைவான் நாட்டில் வெளியாகி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,910ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.85,240ஆக இருக்கிறது. மற்ற நாடுகளில் விரைவில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








