Home
Mobile

மாஸ் கிளப்ப போகும் Asus Zenfone 12 Ultra.. அம்சங்களை கொஞ்சம் பாருங்க.. அசந்துடுவீங்க.. எப்போ அறிமுகம்?

ஆசஸ் (ASUS) நிறுவனம் விரைவில் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் சாதனமான ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா (Zenfone 11 Ultra) மாடலின் வெற்றியை தொடர்ந்து, இந்த புதிய சீரிஸ் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா போனின் அறிமுக தேதி (Zenfone 12 Ultra launch date) எப்போது? இதில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற தகவலை பார்க்கலாம்.

ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவலை ASUS நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. ஆசஸ் நிறுவனம் வரும் 6பிப்ரவரி , 2025 ஆம் தேதி அதன் சொந்த சந்தையான தைவானில் இந்த புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ் கிளப்ப போகும் Asus Zenfone 12 Ultra.. அம்சங்களை கொஞ்சம் பாருங்க..

மாஸ் கிளப்ப போகும் Asus Zenfone 12 Ultra.. அம்சங்களை கொஞ்சம் பாருங்க:

இந்த புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனத்தில் நிறுவனம் என்னென்ன அம்சங்களை வழங்கவுள்ளது என்ற லீக் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் 4K ரெக்கார்டிங் சேவையை போக்கஸ் அம்சத்தை கொண்டிருக்கும் என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் புதிய AI அம்சங்களுடன் பேக் செய்யப்பட்ட பலதரப்பட்ட அம்சங்களை பேக் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் அதிநவீன கேமரா அம்சத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மொபைல் போட்டோகிராஃபி தலைமுறையில் புதுமாதிரியான எக்ஸலெண்ஸ் கேமரா அம்சத்தை இந்த போன் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra):

சமீபத்தில் வெளியான தகவலில் வெளிவரவிருக்கும் புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் ஆசஸ் ராக் போன் 9 (ASUS ROG Phone 9) சீரிஸ் இன் மறுபெயரிடப்பட்ட வேரியண்ட் ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இத்தகைய செயலை ASUS செய்துள்ளதால், இது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

இந்த புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனத்தில் 6.78" இன்ச் அளவு கொண்ட முழு HD+ AMOLED HDR LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. இந்த டிஸ்பிளே 1 முதல் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டில் இயங்கும் டிஸ்பிளேவாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் ஜென்ஃபோன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் 16GB LPDDR5X ரேம் (RAM) உடன் 512GB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் (storage) ஆதரவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது 50MP மெயின் கேமரா + 13MP + 32MP 3xடெலிபோட்டோ லென்ஸ் கொண்ட கேமராவுடன் வெளிவரும். இது 5800mAh பேட்டரி உடன் 65W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை பெரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus Zenfone 12 Ultra Launch Date February 12 2025 Announced Check Expecting Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X