மார்க்கெட்டே மிரள போகுது.. 5800mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது புது ஆசஸ் போன்.. எந்த மாடல்?
ஆசஸ் நிறுவனம் புதிய ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா (ASUS Zenfone 12 Ultra) போனை வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா அம்சங்கள் (ASUS Zenfone 12 Ultra specifications): 50எம்பி மெயின் Sony LYTIA 700 சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி டெலி போட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் வெளிவரும்.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்ற 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம்.
6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடள் இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 5800mAh பேட்டரி உடன் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பலவேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் வெளிவரும். ZenUI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்கு தகுந்த அம்சங்கள் இந்த ஆசஸ் போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








