பிப்ரவரி 6 உறுதி.. சோனி கேமரா.. 65W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது ASUS போன்.. எந்த மாடல்?
ஆசஸ் (ASUS) நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஆசஸ் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் உலகம் முழுவதும் இந்நிறுவனம் கொண்டுவரும் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஆசஸ் நிறுவனம் புதிய ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா (ASUS Zenfone 12 Ultra) போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலக சந்தையில் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 4கே வீடியோ பதிவு, மேம்பட்ட ஏஐ அம்சம் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். இப்போது ஆன்லைன் கசிந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா அம்சங்கள் (ASUS Zenfone 12 Ultra specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடள் இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 50எம்பி மெயின் Sony LYTIA 700 சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி டெலி போட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்ற 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 24ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5800mAh பேட்டரி உடன் ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பலவேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஆசஸ் ஜென்போன் 12 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் ஆசஸ் ஜென்போன் 12 போனின் இந்திய அறிமுகம் குறித்த எந்த தகவலும் இல்லை. பின்பு இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் வெளிவரும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








