ஜூன் 29 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது 200எம்பி கேமரா கொண்ட ASUS 5ஜி போன்.!
ஆசஸ் நிறுவனம் தனது புதிய ஆசஸ் ஜென்போன் 10 மாடலை வரும் ஜூன் 29-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் 200எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான பேட்டரி,தனித்துவமான வடிவமைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 10 மாடலின் அனைத்து அம்சங்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். ஆசஸ் ஜென்போன் 10 மாடல் ஆனது 5.9-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும்.

குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதாவது கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போன் கருப்பு, சாம்பல், பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அறிமுகமாகும்.
ASUS Zenfone 10 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கும் இந்த சிப்செட் மிக அருமையாகப் பயன்படும்.

8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு ASUS ZenUI 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய ஆசஸ் ஜென்போன் 10 ஸ்மார்ட்போன் வெளிவரும்.
200எம்பி பிரைமரி கேமரா +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் 8கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஆசஸ் ஜென்போன் 10 . இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆசஸ் ஜென்போன் 10 மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த போன் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி62 சான்றிதழ் பெற்றுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல். பின்பு 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்தியாவில் ஆசஸ் ஜென்போன் 10 மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








