மிரட்டலான ASUS 5ஜி போன் அறிமுகம்.! வேற லெவல் அம்சங்கள்.. விலையை சொன்னா நம்புவீங்களா?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆசஸ் ஜென்போன் 10 மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது ஆசஸ் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் சிப்செட், அட்டகாசமான கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 3.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல். எனவே கேமிங்பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ASUS ZenUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன் ஸ்பேஷியல் சவுண்டிற்கான Dirac Virtuo அம்சம், இரண்டு மைக்ரோஃபோன்கள், தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா (Sony IMX766 sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டு இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 10 மாடல். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசஸ் ஜென்போன் 10 மாடலின் ஆரம்ப விலை 799 Euros (இந்திய மதிப்பில் ரூ.72,305). பின்பு மிட்நைட் பிளாக், காமெட் ஒயிட், எக்லிப்ஸ் ரெட், அரோரா கிரீன் மற்றும் ஸ்டார்ரி ப்ளூ நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications