தரச்சான்றுதழ் பட்டியலில் சிக்கிய அசுஸ் எக்ஸ்00எல்டி & எக்ஸ்00எல்டிஏ.!

|

மாடல் எண் எக்ஸ்00எல்டி மற்றும் எக்ஸ்00எல்டிஏ என்ற பெயர்களின் கீழ் வரவிருக்கும் ஆசஸ் சாதனத்தின் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் இரண்டு வகைகள் தரமதிப்பீட்டு தளமான கீக்பென்ஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகைகளும் ஒரேமாதிரியான குறிப்புகள் கொண்டுள்ளன. மேலும் சென்போன் 4 தொடரின் உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்படுகின்றன.

கீக்பென்ஞ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று வெளிப்படுத்தபட்டுள்ளது மற்றும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மூலம் இயக்கப்படுகிறது. அசுஸ் மாடல் எண் எக்ஸ்00எல்டி ஆண்டு 4ஜிபி ரேம்-ஐ ஆதரிக்கிறது. கூடுதலாக, இந்த தொலைபேசியானது ஒற்றை மைய சோதனையில் 644 என்ற ஒரு அடிப்படை மதிப்பெண்னையும் பல மைய சோதனையில் 2,500 என்ற மதிப்பெண்ணையும் பெற்றுள்ளது.

2ஜிபி ரேம்

2ஜிபி ரேம்

அசுஸ் மாடல் என எக்ஸ்00எல்டி ஆனது 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. ஒற்றை மைய சோதனையில் இந் ஸ்மார்ட்போன் 680 மதிப்பெண்களையும் மற்றும் பல மைய சோதனையில் 1903 மதிப்பெண்களும் பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே அண்மையில் தொடங்கப்பட்ட அசுஸ் ஜென்போன் 4 மேக்ஸின் மாறுபாடுகளாக இருக்குமென்று பரவலாக அறியப்படுகின்றன.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

நினைவூட்டும் வண்ணம் அந்த தொலைபேசி பல்வேறு ரேம் மற்றும் சேமிப்பக விருப்பங்களில் வெளியானது அதாவது 16ஜிபி சேமிப்புடன் 2 ஜிபி ரேம், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 64 ஜிபி சேமிப்பு கொண்ட 4 ஜிபி ரேம் ஆகிய மாறுமாடுகளில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவுடன் வெளியானது.

5,000 எம்ஏஎச் பேட்டரி

5,000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமானது அதன் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும், இது நிறுவனத்தின் கூற்றுக்களின்படி எல்டிஇ நெட்வொர்க்கில் 46 நாட்கள் காத்திருப்பு நேரம் மற்றும் 22 மணிநேர வீடியோ பின்னணி வழங்கும். இந்த போன் 10வாட் மின்சக்தி சார்ஜருடன் வருகிறது. இது 4 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களில் சாதனம் முழு சார்ஜ் அடைய செய்யும். இதன் மூலம் பிற கேஜெட்டுகளையும் சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

கருவியின் கேமரா துறையை பொறுத்தமட்டில் பின்பக்கம் எல்இடி ப்ளாஷ், 120 டிகிரி அகலமான கோண லென்ஸ் (இரண்டாம் நிலை கேமரா) மற்றும் இஐஎஸ் இணைந்த இரட்டை 13 மெகாபிக்சல் சென்சார்கள் வருகிறது. முன்பக்கம் எப்/ 2.2, 85 டிகிரி வைட்-கோணம் லென்ஸ் மற்றும் மென்மையான எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சமீபத்திய சென்யூஐ (ZenUI) 3.0 உடன் இயங்கும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோயூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை ஆதரிக்கிறது. இது ஒரு கைரேகை சென்சார் கோட்னு வருகிறது மற்றும் அளவீட்டில் 154 x 76.9 x 8.9 மிமீ மற்றும் 181 கிராம் எடையுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ‘X00LD’ with 4GB RAM and ‘X00LDA’ with 2GB RAM spotted on Geekbench. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X