Home
Mobile

எம்டபுள்யூசி2018 : புதிய அசுஸ் சென்ஃபோன் 5இசெட், சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5லைட் அறிமுகம்.!

அசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

By Prakash S

அசுஸ் நிறுவனம் தற்சமயம் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் சென்ஃபோன் 5இசெட், சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5லைட் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் அசுஸ் சென்ஃபோன் 5இசெட் மாடல் பொறுத்தவரை ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசுஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ஃபோன் 5 மாடல் மிட்நைட் புளூ மற்றும் மெட்டார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் சென்ஃபோன் 5லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரோக் ரெட் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கும், அதன்பின்பு சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடல் மிட்நைட் புளூ மற்றும் மெட்டார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

அசுஸ் சென்ஃபோன் 5இசெட்:

அசுஸ் சென்ஃபோன் 5இசெட்:

அசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 2246x1080 பிக்சல் தீர்மானம்
மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 4ஜிபி /6ஜிபி /8ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அசுஸ் சென்ஃபோன் 5இசெட் கேமரா:

அசுஸ் சென்ஃபோன் 5இசெட் கேமரா:

அசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் 5:

அசுஸ் சென்ஃபோன் 5:

அசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் மற்றும் 19:9 என்ற திரைவகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
மற்றும் 4ஜிபி /6ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 64ஜிபி /128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அசுஸ் சென்ஃபோன் 5 கேமரா:

அசுஸ் சென்ஃபோன் 5 கேமரா:

அசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3300 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அசுஸ் சென்ஃபோன் 5 லைட்:

அசுஸ் சென்ஃபோன் 5 லைட்:

அசுஸ் சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் வெளிவரும். மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மற்றும் 3ஜிபி / 4ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 32ஜிபி /64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
அசுஸ் சென்ஃபோன் 5 லைட் கேமரா:

அசுஸ் சென்ஃபோன் 5 லைட் கேமரா:

அசுஸ் சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Unveils ZenFone 5Z and ZenFone 5 Smartphone with iPhone X Like Top Notch; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X