ஆசஸ் நிறுவனத்தின் புதிய டியுல் சிம் பேப்லெட் விரைவில்!!!
இந்தியாவில் உள்ள ஆசஸ் நிறுவனத்தின் சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஒருவர் நமது ஹிஸ்பாட் அணியுடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசஸ் நிறுவனம் புதிய மாடல் பேப்லெட்டை வெளியிடும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு ஆசஸ் நிறுவனம் நிறைய புதிய சாதனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். புதிய மாடல் பேப்லெட்
டியுல் சிம் வசதி கொண்டிருக்கும்.
Click Here For New Asus Tablets Gallery

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
இது 7 இன்ஞ் டிஸ்பிளே மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வரும் என தெரிகிறது. இதில் 3ஜி வாய்ஸ் காலிங் இருக்கும். இதன் விலை ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம். இது அக்டோபரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் டேப்லெட் தயாரிப்பில் ஆசஸ் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. 2013ன் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் 16 லட்சம் டேப்லெட்களை தயாரித்துள்ளது.
முன்பு வெளியான ஆசஸ் போன்பேடின் புதிய வெர்ஸனை ஆசஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதில் 7 இன்ஞ் டிஸ்பிளே மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது.
இதில் 3 மெகாபிக்சல் கேமரா மற்றும் விஜிஏ பிரண்ட் கேமரா உள்ளது. wi-fi, 3ஜி வாய்ஸ் காலிங் கொண்ட புதிய வெர்ஸன் போன்பேடின் விலை ரூ.17.999 ஆகும்.


Click it and Unblock the Notifications