மிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

By Prakash
|

ஆசுஸ் நிறுவனம் சென்போன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெறும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்போன் 5(2018), சென்போன் 5 லைட், சென்போன் 5 மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சென்போன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசுஸ் சென்போன் 5 லைட் பொறுத்தவரை 6.0-இன்ச் டிஸ்பிளே அமைப்புடன் வெளிவரும். அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

மிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சென்போன் 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு வைஃபை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த ஆசுஸ் சென்போன் 5 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

வரும் பிப்பரவரி மாதம் நடக்கும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சியோமி, சாம்சங், ஓப்போ, விவோ போன்ற பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அதிக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சியோமி ஸ்மாரட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆசுஸ் சென்போன் மாடல்கள்.

Best Mobiles in India

English summary
Asus sets a date for MWC 2018 event Zenfone 5 series expected; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X