இந்தியாவில் விரைவில் களமிறங்குகிறது அசஸ் ROG போன்.!

அசஸ் சென்ஃபோன் 5இசட் அறிமுக நிகழ்ச்சியின் இடையே டிஜிட் உடன் பேசிய ஜெர்ரி ஷேன் கூறுகையில், "ROG போன் இந்தியாவில் அறிமுகம் செய்வதில் உறுதியாக உள்ளோம்.

|

கேமிங் ஆர்வலர்களிடம் அதிக காத்திருப்பை ஏற்படுத்தி உள்ள அசஸ் ROG போன் என்ற கேமிங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விரைவில் களமிறங்குகிறது அசஸ் ROG போன்.!

கேமிங் ஆர்வலர்களிடம் அதிக காத்திருப்பை ஏற்படுத்தி உள்ள அசஸ் ROG போன் என்ற கேமிங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசஸ் சென்ஃபோன் 5இசட் குறித்து பேசும் போது, அசஸ் சிஇஓ ஆன ஜெர்ரி ஷேன் கூறுகையில், இந்த காலாண்டில் ROG ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகாரபூர்வமான முறையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.

அசஸ் சென்ஃபோன்

அசஸ் சென்ஃபோன்

அசஸ் சென்ஃபோன் 5இசட் அறிமுக நிகழ்ச்சியின் இடையே டிஜிட் உடன் பேசிய ஜெர்ரி ஷேன் கூறுகையில், "ROG போன் இந்தியாவில் அறிமுகம் செய்வதில் உறுதியாக உள்ளோம். ஆனால் அறிமுக தேதியை என்னால் குறிப்பிட்டு கூற முடியாது என்றாலும் அது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும். தற்போது ஏற்கனவே மூன்றாவது காலாண்டு துவங்கிவிட்ட நிலையில், அறிமுகத்திற்கு இன்னும் நமக்கு மூன்று மாதம் இருக்கிறது" என்றார்.

அசஸ் ROG போன்: சிறப்பு அம்சங்கள்

அசஸ் ROG போன்: சிறப்பு அம்சங்கள்

உங்கள் நினைவிற்காக, அசஸ் ROG ஃபோனில் ஒரு 6 இன்ச் FHD+ அமோல்டு டிஸ்ப்ளே உடன் 18:9 அம்ச விகிதத்தை கொண்டு, 2160 x 1080 பிக்சல் அளவிலான பகுப்பாய்வைப் பெற்றுள்ளது. இதன் திரைக்கு பதிலளிப்பு நேரமாக 1ms எடுத்து கொண்டு, கேமிங் HDR, மொபைல் HDR மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கிறது. அதன் உள்ளே, 296GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 SoC அடிப்படையிலான 10nm செயலி ஆகியவற்றை பெற்று, அதனுடன் LPDDR4 RAM கொண்ட 8GB மற்றும் UFS 2.1 உள்ளக சேமிப்பகம் கொண்ட 128GB/512GB ஆகியவை இணைந்து செயலாற்றுகிறது.

ஆண்ட்ராய்டு 8.1

ஆண்ட்ராய்டு 8.1

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ-வில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ROG கேமிங் X மோடு UI-யைக் கொண்டு முன்னணி வகிக்கிறது. இரு நானோ சிம் கார்டுகளை இது ஆதரிப்பதோடு, NFC, 4G வோல்டி, வைஃபை, ப்ளூடூத் 5 மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட மற்ற இணைப்பு அமசங்களைக் கொண்டுள்ளது. படப்பிடிப்பிற்கு உதவும் வகையில், ஒரு இரட்டை கேமரா செட்அப்-பை பின்பக்கத்தில் பெற்று, அது LED ஃபிளாஷ், f/1.8 துளை, PDAF, 4-அக்சிஸ் OIS மற்றும் AI சீன் கண்டறிதல் ஆகியவை உடன் கூடிய 12MP மற்றும் 8MP சென்ஸர்களைக் கொண்டுள்ளது. இது தவிர, f/2.0 துளை மற்றும் 84-கோணத்திலான இருப்பிட பார்வை உடன் கூடிய ஒரு 8MP செல்ஃபீ கேமராவையும் கொண்டுள்ளது.

 4000mAh பேட்டரி

4000mAh பேட்டரி

இந்த அசஸ் கேமிங் ஸ்மார்ட்போனில், இரட்டை முன்பக்கத்தை நோக்கிய ஸ்பீக்கர்கள், இரட்டை ஸ்மார்ட் அம்பிளிஃபையர்கள், உயர் பகுப்பு கொண்ட ஆடியோ, மும்மடங்கு உள்ளக மைக்ரோஃபோன்கள் உடன் அசஸ் ஒலி குறைப்பு தொழிற்நுட்பம் மற்றும் FM ரேடியோ ஆகியவை காணப்படுகிறது. மேலும் இந்தச் சாதனத்தில் நீர் தடுப்பு கட்டமைப்பு இருப்பதோடு, 4000mAh பேட்டரியில் இருந்து ஆற்றலைப் பெறுகிறது. இதற்கு 10V 3A விரைவு சார்ஜிங் அம்சமும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone to launch in India this quarter Confirms CEO Jerry Shen : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X