Home
Mobile

கேமர்களுக்கு விருந்து வைக்கப்போகும் Asus.. உலகமே இந்த போனுக்கு தான் வெயிட்டிங்.. என்ன அம்சங்கள்?

அந்தா வரும், இந்தா வருமென்று பல காத்திருந்த அந்த ஒரு ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கேமிங் மற்றும் பவர்புல் ஸ்மார்ட்போன்களுக்கென்று தனி பெயர் பெற்ற அசுஸ் (Asus) நிறுவனம் அதன் அடுத்த பவர்புல் ஸ்மார்ட்போன் சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் அசுஸ் ராக் போன் 9 (ASUS ROG Phone 9) என்ற சீரிஸ் பெயருடன் அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனின் அறிமுக தேதி இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ASUS ROG 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனம் வரும் நவம்பர் 19, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று இப்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய விபரங்கள் மற்றும் சிறப்பம்ச தகவல்கள் லீக் ஆக துவங்கியுள்ளது. இந்த முக்கியமான தகவலை பற்றி இப்போது பார்க்கலாம்.

கேமர்களுக்கு விருந்து வைக்கப்போகும் Asus.. உலகமே இதுக்கு வெயிட்டிங்..

கேமர்களுக்கு விருந்து வைக்கப்போகும் Asus.. உலகமே இந்த போனுக்கு தான் வெயிட்டிங்:

வரவிருக்கும் ASUS ROG 9 தொடர் விரைவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் ( Qualcomm Snapdragon 8 Elite) சிப் உடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ASUS இந்த ஆண்டு ஜனவரியில் அசுஸ் ராக் 8 (ASUS ROG 8) சீரிஸை அறிமுகப்படுத்தியது. அசுஸ் ராக் போன் 9 (ASUS ROG phone 9) சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிய அசுஸ் ராக் 9 தொடர் ஏற்கனவே ASUSAI2501C என்ற மாடல் எண்ணுடன் இணையத்தில் காணப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸின் அறிக்கையின்படி, அசுஸ் ராக் 9 தொடரில் இரண்டு மாடல்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் அசுஸ் ராக் 9 என்ற ஸ்டாண்டர்ட் வெர்ஷன் மற்றும் மற்றும் அசுஸ் ராக் 9 ப்ரோ (ASUS ROG 9 Pro) என்ற ப்ரோ வேரியண்ட் மாடல்கள் இடம்பெறும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இதன் ப்ரோ மாடல்கள் Q1 2025 இல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ASUSAI2501C எண் எந்த மாடலைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அசுஸ் ராக் 9 (ASUS ROG 9):

அசுஸ் ராக் 9 தொடரில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் (Snapdragon 8 Gen Elite) சிப்செட் இடம்பெறும். இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும். ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 அதன் ஈர்க்கக்கூடிய வேகத்திற்காக குறிப்பிடத்தக்கது. முன்மாதிரி சோதனைகளில் 4.2GHz கிளாக் டைம் வேகத்தை இது எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இது சிங்கிள் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் முறையே 3K மற்றும் 10K மதிப்பெண்களைப் பெற்றது.

அசுஸ் ராக் 9 ப்ரோடோடைப் ஆப்பிள் A17 ப்ரோவை சிங்கிள்-கோர் சோதனைகளில் விஞ்சியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெய்போ டிப்ஸ்டர் டிஜிட்டல் சட ஸ்டேஷன் இந்த செயல்திறனைக் குறிப்பிட்டது. அசுஸ் ராக் 9 தொடர் வழக்கமான கேமிங் சக்தியுடன் பல சிறப்பம்சங்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. அசுஸ் ராக் 9 தொடர் மொபைல் நீண்ட நேர கேமிங் பிளே நேரத்தை வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

அசுஸ் ராக் 8 தொடர் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், அசுஸ் ராக் 9 தொடர் போன் ROG ஃபோன் 8 மற்றும் 8 ப்ரோ போன்ற RGB லோகோ மற்றும் மினி-எல்இடி லைட் உடன் கூடிய மேட்ரிக்ஸைக் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை 165Hz FHD+ LTPO AMOLED பேனல் 2500 nits வரை பிரைட்னஸை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அசுஸ் ராக் 9 தொடரின் அடிப்படை மாடல் 12 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம் விருப்பங்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், சக்தி வாய்ந்த ப்ரோ மாடல் 16 ஜிபி ரேம் அல்லது 24 ஜிபி ரேம் அம்சத்தை பெற அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் விருப்பங்களில் அடிப்படை மாடலுக்கு 256GB UFS 4.0 மற்றும் ப்ரோ மாடலுக்கு 512GB/1TB இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 9 Gaming and Powerfull Smartphones Specs Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X