Home
Mobile

முரட்டு போனா இருக்கே.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 65W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

கிங் ஆஃபர் கேமிங் போனுனு சொல்லாம் போல அவ்வளவு முரட்டு பீச்சர்களுடன் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 எப்இ (ASUS ROG Phone 9 FE) களமிறங்கி இருக்கிறது. 185Hz கேமிங் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன், 16 ஜிபி ரேம், 65W ஹைப்பர் சார்ஜ் மற்றும் 5500mAh பேட்டரியில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 எப்இ போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஆசஸ் போனானது, பிரத்யேகமாக கேமிங் பிரியர்களுக்காகவே டிசைன் மற்றும் பீச்சர்களை கொடுக்கிறது. அனிமீ விஷன் (AniMe Vision) பேனல் கிடைக்கிறது. இந்த பேனலில் 341 மைக்ரோ எல்இடிகள் இருக்கின்றன. இதன் மூலம் அனிமேட்டெட் எஃபெக்ட்களை கிரியேட் செய்து கொள்ளலாம். ஏர்டிரிக்கர் (AirTrigger), ஏரோஆக்டிவ் கூலர் எக்ஸ் ப்ரோ (AeroActive Cooler X Pro) உள்ளது.

முரட்டு போனா இருக்கே.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி!

கேமிங்குக்கான ஏஐ பீச்சர்களை பார்க்கையில், விக்டரி ரெக்கார்டிங்குக்காக எக்ஸ் கேப்ச்சர் 2.0 (X Capture 2.0), கேமிங் டிரான்ஸ்லேஷனுக்காக ஏஐ கிராப்பர் 2.0 (AI Grabber 2.0), ஏஐ இமேஜ் ரிககனைசேஷன் கொடுக்க எக்ஸ் சென்ஸ் 3.0 (X Sense 3.0) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, புது கேமிங் அனுபவத்தை இந்த போனில் பார்க்கலாம். இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 எப்இ அம்சங்கள் (ASUS ROG Phone 9 FE Specifications): இந்த ஆசஸ் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த சாம்சங் ஈ6 (Samsung E6) டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

ஆனால், 185Hz கேமிங் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மேலும், 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் மட்டுமல்லாமல், அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஆர்ஓஜி யுஐ (ROG UI) உள்ளது.

இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 எப்இ போனில் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. கேமிங் பீச்சர்கள் மட்டுமல்லாமல், கேமரா பீச்சர்களிலும் மிரள விட்டுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) மற்றும் 6-ஆக்சிஸ் கிம்பல் ஸ்டெபிலைசேஷன் (6 Axis Gimbal Stabilization) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

மேலும், 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 5 மேக்னட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஆசஸ் போனில் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 65W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

மேலும், குயிக் சார்ஜ் 5.0 சப்போர்ட் உள்ளது. பாண்டம் பிளாக் (Phantom Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, தாய்லாந்து நாட்டில் வெளியாகி இருக்கிறது. அந்த நாட்டில் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 எப்இ போனின் விலை ரூ.77,475 ஆக இருக்கிறது. அங்கு விற்பனையும் தொடங்கிவிட்டது. மற்ற நாடுகளில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS ROG Phone 9 FE With 50MP Camera 16GB RAM 5500mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X