சம்பவம் இருக்கு.. Sony கேமரா.. 24ஜிபி ரேம்.. ஜன.8-ல் வருகிறது புதிய ஆசஸ் போன்.. எந்த மாடல்?
ஆசஸ் (Asus) நிறுவனத்தின் ஆர்ஓஜி போன் சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஆர்ஓஜி மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் ஆர்ஓஜி மாடல்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 (Asus ROG Phone 8) மாடல் ஆனது வரும் ஜனவரி 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய போனின் டீசரை சமீபத்தில் ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 அம்சங்கள்: 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அறிமுகமாகும். மேலும் எச்டிஆர 10 ஆதரவு, 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ( Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல். மேலும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 பிரைமரி சென்சார் (Sony IMX890 primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஆசஸ் போன்.

5500எம்ஏஎச் பேட்டரி உடன் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய குவிக் சார்ஜ் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ஆனது இந்தியாவில் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 போனில் இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








