அட்டகாசமான அம்சங்களுடன் புதிய போனை இறக்கிவிடும் Asus: அறிமுக தேதி இதுதான்.!
ஆசஸ் நிறுவனம் தரமான கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ASUS ROG Phone 7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஆசஸ் நிறுவனம்.
அதாவது ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ROG Phone 7 மாடல் ஆனது வரும் ஏப்ரல் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் அட்டகாசமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்பபோம்.

ஆசஸ் ROG Phone 7 அம்சங்கள்: விரைவில் அறிமுகமாகும் ஆசஸ் ROG Phone 7 மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஆசஸ் ROG Phone 7 மாடலை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.
குறிப்பாக ஆசஸ் ROG Phone 7 ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப்
வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, ட்ரிபிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஆசஸ் ROG Phone 7
ஸ்மார்ட்போன்.
ஆசஸ் ஜென்போன் 9:அதேபோல் ஏற்கனவே இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஆசஸ் ஜென்போன் 9 மாடலுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது ஆசஸ் ஜென்போன் 9 மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.
1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த போன். ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன்.

இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு அருமையாகஇருக்கும். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்றவைகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.
ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். ஜென்போன் 9 போன் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாகநிறுவனம் கூறுகிறது.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன். அதேபோல் விரைவில் அறிமுகமாகும் ஆசஸ் ROG Phone 7 தனித்துவமான
அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








