Home
Mobile

முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் ASUS:இப்படி ஒரு போன் மட்டும் கையில் இருந்தா!

ஆசஸ் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களை விட ஆசஸ் தனித்துவமான கேமிங் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஆசஸ் நிறுவனம் விரைவில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது ஆசஸ் நிறுவனம் புதிய ASUS ROG Phone 7 எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் ASUS.!

விரைவில் அறிமுகமாகும் ஆசஸ் ROG Phone 7 ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 2448 × 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் ஆதரவு, 20.4:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம்.

குறிப்பாக ஆசஸ் ROG Phone 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் சிப்செட் வசதியுடன் Adreno next-gen GPU உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவம் கொடுக்கும். பின்பு இந்த போன் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ROG UI & Zen UI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ஆசஸ் ROG Phone 7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனில் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக ஆசஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் ASUS.!

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ROG Phone 7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய ஆசஸ் ROG Phone 7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன்.

முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் ASUS.!

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3 ஜபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஆசஸ் ROG Phone 7 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் தரமான ஆடியோ ஆதரவுடன் அறிமுகமாகும். அதேபோல் ஆசஸ் ROG Phone 7 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். குறிப்பாக இதுபோன்ற ஒரு போன் நமது கையில் இருந்தால் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். அதே சமயம் சிறந்த கேமிங் அனுபவத்தையும் பெற முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS ROG Phone 7 to launch soon with 50MP camera and 6000mAh battery: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X