Home
Mobile

வாங்குனா இந்த கேமிங் போன் வாங்குங்க: தரமான சம்பவம் செய்த ASUS.! முழு விவரம்.!

ஆசஸ் நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ASUS ROG Phone 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஆசஸ் நிறுவனம்.

குறிப்பாக இந்த ஆசஸ் ROG போன் 7 மாடல் ஆனது தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வாங்குனா இந்த கேமிங் போன் வாங்குங்க: தரமான சம்பவம் செய்த ASUS.!

ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் எச்டிஆர் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2448x1080பிக்சல்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் உடன் அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ROG யுஐ மற்றும் ஜென் யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

வாங்குனா இந்த கேமிங் போன் வாங்குங்க: தரமான சம்பவம் செய்த ASUS.!

புதிய ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஆசஸ் போன். குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன்.

வாங்குனா இந்த கேமிங் போன் வாங்குங்க: தரமான சம்பவம் செய்த ASUS.!

ஸ்டார்ம் வைட் மற்றும் ஃபேண்டம் பிளாக் நிறங்களில் இந்த ஆசஸ் ROG போன் 7 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.74,999-ஆக உள்ளது. பின்பு இந்த போன் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த போன் விரைவில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS ROG Phone 7 smartphone has been launched in India: Check Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X