ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனின் அறிமுக தேதி வெளியானது? தரமான அம்சங்கள்.!

|

ஆசஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் எனும் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆசஸ் ROG Phone 6D

ஆசஸ் ROG Phone 6D

அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பில் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல்இதன் வடிவமைப்புக்கு அதிக செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனின்அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!அறிமுகமானது எலிஸ்டா ஸ்மார்ட் எல்இடி டிவி: பெசல்லெஸ் வடிவமைப்பு, வெப்ஓஸ் ஆதரவு- அம்சம்தான் ப்ரீமியம் விலையல்ல!

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

Asus ROG Phone 6D அல்டிமேட் ஆனது மீடியாடெக் Dimensity 9000 பிளஸ் சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகஇந்த சிப்செட் வசதி சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இதுதவிர ARM Mali G710 MC10 GPU கிராபிக்ஸை கொண்டுள்ளது இந்த புதிய ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

குறிப்பாக இந்த புதிய ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

இயங்குதளம்?

இயங்குதளம்?

புதிய ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிப்செட் வசதியைவிட கேமரா வசதியும் மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

தரமான கேமரா

தரமான கேமரா

அதாவது இந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 50எம்பி Sony IMX766 பிரைமரி கேமரா வசதியும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

வெளிவந்த தகவலின்படி, ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

இந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 165Hz FHD+ AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 6D Ultimate smartphone will be launched on September 19: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X