Home
Mobile

கொடூரமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Asus- இப்படி ஒரு போன் மட்டும் கையில் இருந்தா!

Asus ROG Phone 6 Diablo Immortal Edition ஸ்மார்ட்போனானது தைவானிய நிறுவனம் Blizzard உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய எடிஷன் போன் 6 ஆனது டயப்லோ இம்மார்டல் கிராபிக்ஸ் உடன் Aura RGB லோகோவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் லுக்கும் அம்சங்களும் மெய் சிலிரக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

Asus ROG Phone 6 Diablo Immortal Edition

Asus ROG Phone 6 Diablo Immortal Edition

Asus ROG Phone 6 Diablo Immortal Edition ஸ்மார்ட்போனானது தைவானிய நிறுவனம் Blizzard உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய எடிஷன் போன் 6 ஆனது டயப்லோ இம்மார்டல் கிராபிக்ஸ் உடன் Aura RGB லோகோவை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் ஆனது ஹெல்ஃபைர் ரெட் செமி மேட் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

டயப்லோ தீம் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆர்ஓஜி போன் 6 இன் சிறப்பு எடிஷன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Asus ROG Phone 6 இன் அடிப்படை வேரியண்ட் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகமானது.

ஸ்மார்ட்போனின் விலை என்ன?

ஸ்மார்ட்போனின் விலை என்ன?

அசுஸ் ஆர்ஓஜி போன் 6 இன் சிறப்பு எடிஷனாக Asus ROG Phone 6 Diablo Immortal Edition அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்படவில்லை. இந்த சிறப்பு எடிஷன் ஸ்மார்ட்போனானது ஹோராடிக் கியூப் போன்ற பாக்ஸ் இல் வைத்து விற்கப்படுகிறது. இந்த பேக்கேஜில் வேர்ல்ட்ஸ்டோன் ஷார்ட் எனப்படும் கேமிங்கிற்கு பயன்படும் புகழ்பெற்ற சாதனமும் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட்

பிரத்யேக எடிஷன் ஸ்மார்ட்போனான இது Diablo Immortal கிராபிக்ஸ் மற்றும் ஹெல்ஃபயர் ரெட் செமி-மேட் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. டயப்லோ தீம் மற்றும் அனிமேஷன் ஐகான்களும் இதில் வழங்கப்படுகிறது.

Asus Diablo Immortal ROG Phone 6 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் தான் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்த ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிற அம்சங்கள் ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்யேக டிஸ்ப்ளே

பிரத்யேக டிஸ்ப்ளே

Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஸ்மார்ட்போனானது 165Hz ரெஃப்ரஷிங் ரேட், HDR10+ ஆதரவு மற்றும் பிரத்தியேக ROG ட்யூனிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 6.78-இன்ச் முழு-HD+ Samsung AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆர்ஓஜி போன் 6 மற்றும் ஆர்ஓஜி போன் 6 ப்ரோ

ஆர்ஓஜி போன் 6 மற்றும் ஆர்ஓஜி போன் 6 ப்ரோ

ஆர்ஓஜி போன் 6 மற்றும் ஆர்ஓஜி போன் 6 ப்ரோ இந்திய விலை குறித்து பார்க்கையில், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.71,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் Asus ROG Phone 6 Pro ஸ்மார்ட்போனின் 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.89,999 ஆக இருக்கிறது.

மேம்பட்ட டிஸ்ப்ளே ஆதரவு

மேம்பட்ட டிஸ்ப்ளே ஆதரவு

Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், டூயல் சிம் (நானோ), ROG ​​UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.78 இன்ச் முழு HD+ (1,080x2,448 பிக்சல்கள்) Samsung AMOLED டிஸ்ப்ளே, 165Hz புதுப்பிப்பு வீதம், 720Hz டச் ரேட்டிங் உடன் HDR10+ ஆதரவு மற்றும் 1200 nits பிரைட்னஸ் அம்சத்தை கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலின் பின்புற பேனலில் ROG விஷனுடன் கூடிய சிறிய PMOLED டிஸ்ப்ளே இருக்கிறது.

கேம் கூலிங் சிஸ்டம்

கேம் கூலிங் சிஸ்டம்

Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேம்கூல் 6 எனப்படும் கேம் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய அப்டேட் இது என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி சோனி IMX766 முதன்மை கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா ஆதரவு இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. Asus ROG Phone 6 ஆனது Phantom Black மற்றும் Storm White வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் Asus ROG Phone 6 Pro ஆனது Storm White வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 6 Diablo Immortal Edition Launched by Blizzard with snapdragon 8+ gen 1 Chipset at Different Look
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X