பிப்ரவரி 15 அறிமுகமாகும் ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ்,ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ-உயர்ரகஅம்சம், அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ஆசுஸ் நிறுவனத்துக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கின்றன. இந்த நிலையிஸ் ஆசுஸ் நிறுவனம் புதிய ஆர்ஓஜி சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இந்தியாவில் ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ சாதனங்களை அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஆகியவை இந்தியாவில் பிப்ரவரி 15 அன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன, மேலும் அவை முதன்மையான ஸ்னாப்டிராகன் 888+ செயலி ஆதரவோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ், ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ
ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ், ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ இந்தியாவில் பிப்ரவரி 15 அன்று அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஆகிய இரண்டும் பிப்ரவரி 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (மதியம்) அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும். தற்போது, இந்த ஸ்மார்ட்போன்கள் எப்போது நாட்டில் கிடைக்கும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால் இரண்டு வேரியண்ட் மாடல்களும் அமெசான் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ், ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ அம்சங்கள்
தற்போதைய நிலவரப்படி, இந்த சாதனங்களின் இந்திய வேரியண்ட்களின் அம்சங்கள் குறித்த எந்த தகவலையும் ஆசுஸ் வெளியிடவில்லை. உலகளாவிய மாடல்களைப் போலவே இங்கும் அதே அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் சில சிறிய மாற்றங்களைத் தவிர ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேமிங் ஸ்மார்ட்போன்களான இதன் அம்சங்கள்
கேமிங் ஸ்மார்ட்போன்களான இந்த சாதனங்கள் 6.78-இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2448 பிக்சல்கள்) சாம்சங் அமோலெட் இ4 டிஸ்ப்ளே ஆதரவோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆசுல் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆனது 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. அதே போல் ப்ரோ மாடலும் 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

6,000 mAh பேட்டரி ஆதரவு
மேலும், இரண்டு ஸ்மார்ட்போன்களும் மேலே ஆர்ஓஜி யூஐ ஸ்கின் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 6,000 mAh பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் இமேஜிங் ஆதரவுக்கு என 64 எம்பி பிரைமரி சென்சார், 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆகியவை என டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு என முன்புறத்தில் 24 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டார்ம் வைட் வண்ண விருப்பம்
ஆசுஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆனது பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டார்ம் வைட் வண்ண விருப்பங்களில் வரும் எனவும் ஆசுஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஒற்றை பேம்டம் பிளாக் வண்ண விருப்பத்தில் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை குறித்த விவரங்கள் தெளிவாக தெரியவில்லை இருப்பினும் விரைவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications