விரைவில் அறிமுகமாகும் அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன்.!
அசுஸ் நிறுவனம் தனது புதிய அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் சில அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் அசுஸ் ரோக் போன் 5எஸ் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதியுடன் வெளிவரும்.பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். குறிப்பாக கேமிங்வசதிக்கு தகுந்தபடி இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆன்லைன் கேமிங்பயனர்கள் இந்த சாதனத்தை வாங்குவது நல்லது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வசதியுடன் தான் வெளிவரும். அதாவது சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த சாதனத்தின் டிஸ்பிளே.இதுதவிர கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன்.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பல மணி நேரம் இந்த ஸ்மார்ட்போனில் கேம் விளையாட முடியும். பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன்.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த புதிய அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மாரட்போன்வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசுஸ் ரோக் போன் 5எஸ் சாதனத்தில் 5ஜி ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications








