Home
Mobile

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் ரோக் போன் 5.!

அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அசுஸ் ரோக் போன் 5 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் ரோக் போன் 5.!

வெளிவந்த தகவலின்படி வரும் மார்ச் மாதம் இந்த அசுஸ் ரோக் போன் 3 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதன்படி அசுஸ் ரோக் போன் 5 மாடலின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா +16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் ரோக் போன் 5.!

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் டிஸ்பிளே வடிமைப்பு உள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 144Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

அசுஸ் ரோக் போன் 5 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குறிப்பாக இந்த அசுஸ் ரோக் போன் 5 மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அசுஸ் ரோக் போன் 5 மாடலில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் ரோக் போன் 5.!

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 5 with 64 Mega Pixel Camera Launching in India on March: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X