Home
Mobile

டிசம்பர் 26: இந்தியாவில் விற்பனைக்கு வரும் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட்.!

அசுஸ் நிறுவனம் வரும் டிசம்பர் 26-ம் தேதி அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது.. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 18ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட்

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட்

18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.79,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் சோலார் ஸ்டார்ம் ஒயிட் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த சாதனத்திற்குசில சலுகைகளும் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,448 பிக்சல் தீர்மானம், 20:4:9 என்ற திரைவிகதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடல்.

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக உதவும். மேலும் ROG UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மாரட்போன் மாடல்.

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட்

இந்த அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Sony IMX686 சென்சார்+ 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார்+ 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 24எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் 18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி உள்ளது.

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட்

அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

அசுஸ்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி5.2,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அசுஸ் ExpertBook B1400லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசுஸ் ExpertBook B1400 லேப்டாப்

அசுஸ் ExpertBook B1400 லேப்டாப்

அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் ஆனது 14-இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு1920 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம், 84% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம். விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த சாதனத்தை பயனர்கள் விண்டோஸ் 11க்கு மேம்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலில் 11th-Gen Intel Core Tiger Lake பிராசஸர் வசதி உள்

அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலில் 11th-Gen Intel Core Tiger Lake பிராசஸர் வசதி உள்ளது. எனவேஇயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

குறிப்பாக இன்டெல் கோர் ஐ3 - 111G4 with Intel UHD GPU, இன்டெல் கோர் ஐ5-1135G7 with Intel Xe GPU மற்றும்இன்டெல் கோர் ஐ7- 1165G7 with Intel Xe GPU உள்ளிட்ட அம்சங்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தில் 16ஜிபி ரேம் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலில்

அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலில் யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட், ப்ளூடூத் வி5.2, இரண்டு யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-ஏ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், மைக்ரோஎஸ்டி கார்ட் ரீடர், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், ஒரு விஜிஏ போர்ட், Gigabit RJ-45 LAN போர்ட், 3.5mmஹெட்ஃபோன் ஜாக், வைஃபை 802.11ஏஎக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த சாதனம் noise cancellation தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் 42 மணிநேர பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும்
என்றால் 3-cell 42Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசுஸ் ExpertBook B1400 லேப்டாப். அதேபோல் விலைக்குதகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடல்.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 5 Ultimate goes on sale in India on December 26th: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X