ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களா நீங்கள்: இதோ ஆசஸ்-ன் அட்டகாச அறிவிப்பு!
ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் 5 மாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2400 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவுடன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆசஸ் ஸ்மார்ட்போன் தற்போது அடுத்த கேமிங் சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த ஆர்ஓஜி போன் 5 என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 கீக்பெஞ்ச் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கீக்பெஞ்ச் பட்டியலின்படி இந்த ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் 5 மாதிரி எண் I005DA உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயக்க முறையில் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. கீக்பெஞ்ச் 5 ஸ்மார்ட்போன் ஒற்றை கோர் மற்றும் மல்டி கோர் முறைமைகளில் இயக்கப்படுகிறது.
டீன்னா பட்டியலின்படி, ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 சாதனத்தில் பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை ஸ்கோனர், அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வரும். ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனத்தின் லோகோ ஸ்மார்ட்போனின் பின்புற மையப்பகுதியில் உள்ளது.
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5, 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவை உள்ளது. மேலும் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications