Asus ROG Phone 5 கேமிங் போன் 16 ஜிபி ரேம் உடன் அடுத்த மாதம் அறிமுகமா?
Asus நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலான அசுஸ் ராக் போன் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில லீக்ஸ் தகவல்கள் வெளியாகி வந்தது, ஆனால் இது எப்போது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரியாமல் இருந்து வந்தது.

நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பின்னர், ஒருவழியாக இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது Asus ROG Phone 5 சாதனம் கீக்பெஞ்ச் மார்க்கிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் முகேஷ் சர்மாவின் அறிவிப்பு படி இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Asus நிறுவனத்தின் பட்டியலில் இன்னும் ராக் போன் 4 வெளியாகாத காரணத்தினால், இது ராக் போன் 4 தான் என்று சிலர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், Asus ROG Phone 5 என்ற பெயரில் தான் இந்த அட்டகாசமான கேமிங் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று இதன் சமீபத்திய டீஸர் வீடியோ தகவல் தெரிவிக்கிறது. இந்த வீடியோவின் ஓரத்தில் 5 என்ற எண் இருப்பதனால் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.
Asus ROG Phone 5 சாதனம் I005DA என்ற மாடல் என்னுடன் ஸ்னாப் டிராகன் 888 சிப்செட் உடன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இந்த சாதனம் சிங்கிள் கோர் டெஸ்டிங்கில் 1131 மதிபெண்களையும் மல்டி கோர் டெஸ்டிங்கில் 3729 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இந்த சாதனம் 16ஜிபி ரேம் உடன் 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications