18 ஜிபி ரேம் உடன் அசத்தலான ஆசஸ் ராக் போன் 5 வெளிவர தயார்..

|

ஆசஸ் ராக் போன் 5 (Asus ROG Phone 5) ஸ்மார்ட்போன் மாடல் கீக்பெஞ்சில் பட்டியலில் நம்ப முடியாத 18 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் என்றும் பட்டியல் காட்டுகிறது. ஆசஸ் ROG போன் 3 (Asus ROG Phone 3) இன் வாரிசான ROG போன் 5 குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் இயக்கப்படும்.

மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமா?

மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமா?

இந்த புதிய கேமிங் போன் மார்ச் 10 ஆம் தேதி தைவானின் நேரப்படி இரவு 7 மணிக்கு (இந்தியாவில் மாலை 4:30 மணி IST) அறிமுகம் செய்யப்படும் என்று ஆசஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே நேரலையில் ஸ்மார்ட்போன் பற்றிய பக்கம் உள்ளது, இருப்பினும், இது ஸ்மார்ட்போன் பற்றிய எந்த தகவலையும் பகிரவில்லை.

ஆசஸ் ராக் போன் 5 மதிப்பெண்கள்

ஆசஸ் ராக் போன் 5 மதிப்பெண்கள்

சமீபத்திய கீக்பெஞ்ச் பட்டியல் மாடல் எண் ASUS_I005DB என்ற பெயரில் ஆசஸ் ராக் போன் 5 ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. ஆசஸ் ராக் போன் 5 மல்டி கோர் சோதனையில் 3.468 மதிப்பெண்கள் எடுத்து, சிங்கிள் கோர் சோதனையில் 1,113 புள்ளிகளை பெற்றுள்ளது. அண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 18 ஜிபி ரேம் உடன் பட்டியலில் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 1.8Ghz SoC ஆல் இயக்கப்படுகிறது.

மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

16 ஜிபி ரேம் வேரியண்ட்

16 ஜிபி ரேம் வேரியண்ட்

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆகும். ஆசஸ் ஸ்மார்ட்போன்களின் வரலாற்றில் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இது எப்போதும் கடந்த காலங்களில் முதன்மையான குவால்காம் SoC உடன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மாதிரி எண் ASUS_I005DA மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட போன் பெஞ்ச்மார்க் செய்யப்பட்டது.

6,000 எம்ஏஎச் பேட்டரி

6,000 எம்ஏஎச் பேட்டரி

ASUS_I005DA, மற்றும் சமீபத்திய ASUS_I005DB ஆகியவை வெவ்வேறு ரேம் திறன்களைக் கொண்ட ஆசஸ் ROG போன் 5 இன் இரண்டு வெவ்வேறு வேரியண்ட் மாடல்கள் என்பது கவனத்திற்கு. ROG போன் 5 வெளியீடு மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என்று ஆசஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. இது 6.78' இன்ச் டிஸ்பிளேவுடன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டு அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ROG Phone 5 Gets 18GB RAM and 16 GB RAM Variant Allegedly Spotted on Geekbench : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X