அட்டகாசமான Asus ROG Phone 4 ரெடி.. கீக்பெஞ்ச் ஸ்கோர் இது தான்..

|

ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ROG போன் 3 மாடலை அறிமுகப்படுத்திய பின்னர், ஆசஸ் ரிபப்ளிக் ஆஃப் கேமர்ஸ் (ROG) இப்போது 'ஆசஸ் ROG போன் 4' (Asus ROG Phone 4) என்று பெயரிடப்பட்ட புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கீப்செஞ்ச் தகவல்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய ஆசஸ் ROG போன் 4

புதிய ஆசஸ் ROG போன் 4

ஆசஸ் ROG போன் 4 ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் இந்த புதிய கேமர் போனில் என்ன சிப்செட், ரேம் மற்றும் சாப்ட்வேர் கொடுக்கப்படும் என்பதை இப்பொழுது இந்த பதிவில் பார்க்கலாம். புதிய ஆசஸ் ROG போன் 4 போனில் என்ன-என்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இதன் கீக்பெஞ்ச் தகவல் மிகத் துல்லியமாக நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

நோக்கியாமோப் கண்டுபிடித்த கீக்பெஞ்ச் பட்டியலின் படி, ஆசஸ் ROG போன் 4 சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் 1.80 ஜிகாஹெர்ட்ஸ் 8 ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகை வேரியண்ட் மாடல் கீக்பெஞ்ச் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று ஆசஸ் ROG போன் 4 ஸ்மார்ட்போன் மற்ற ரேம் வேரியண்ட் மாடலாகவும் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

கீக்பெஞ்ச் ஸ்கோர்

கீக்பெஞ்ச் ஸ்கோர்

சாப்ட்வேர் பொறுத்தவரை, ஆசஸ் ROG போன் 4 Android 11 இயங்குதளத்தில் இயக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் விவரக்குறிப்புகளின் கீழ் சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் வரையறைகளில் முறையே 1081 மற்றும் 3584 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கீக்பெஞ்ச் பட்டியலில், தொலைப்பேசி ASUS_I005DA என்ற மாடல் எண்ணைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை கீக்பெஞ்ச் தகவல் காட்டியுள்ளது.

அடுத்த லீக் தாவல்களுக்கு காத்திருப்போம்

அடுத்த லீக் தாவல்களுக்கு காத்திருப்போம்

இந்த வரவிருக்கும் ஆசஸ் ROG போன் 4 பற்றி இப்போதைக்கு வேறு எந்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வரவிருக்கும் நாட்களில் இந்த வரவிருக்கும் ஆசஸ் ROG போன் 4 பற்றி மேலும் லீக் தாவல்கள் நிச்சயம் வெளிப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ROG Phone 4 appears on Geekbench with Snapdragon 888 chipset : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X