Home
Mobile

சத்தமின்றி அசுஸ் ரோக் போன் 3 அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

அசுஸ் நிறுவனம் சத்தமின்றி தனது புதிய அசுஸ் ரோக் போன் 3 எனும் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக அதிநவீன மென்பொருள் வசதி,சிறந்த கேமரா வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கேமிங் ஸ்மார்ட்போன்களில் இது தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம்

6x பெரிய ஹீட்ஸிங்க், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காப்பர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம் ஆகியவற்றை வழங்கும் சமீபத்திய கேம்கூல் 3 வெப்ப-சிதறல் அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. மேலும் தனித்துமான வடிமைப்பு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

அசுஸ் ரோக் போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி,1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனத்தில் மிகவும்

அசுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3எம்பி அல்ட்ரா

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச்

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புளூடூத் 5.1, வைஃபை, டூயல்

5 ஜி, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 8ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது, பின்பு 12ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை ரூ.57,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 3 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X