Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: பிளிப்கார்ட்டில் கூடுதல் சலுகை!

|

Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசஸ் ROG போன் 3 மூன்றாம் ஜென் ஃபிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போனாகும். இது மூன்று வேரியண்ட் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆசஸ் ROG போன் 3

ஆசஸ் ROG போன் 3

ஆசஸ் ROG போன் 3 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த ஜூலை அறிமுகம் செய்யப்பட்டது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களுக்கும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு அறிவிப்பு

விலைக்குறைப்பு அறிவிப்பு

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3, 8ஜிபி ரேம் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.49,999-க்கு அறிமுகமானது. விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ரூ.46,999-க்கு கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.49,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.54,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

ஒற்றை கருப்பு வண்ண விருப்பம்

ஒற்றை கருப்பு வண்ண விருப்பம்

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3, மூன்று வேரியண்ட்களுக்கும் ரூ.3000 நிரந்தர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கும். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்கள் மூலம் வாங்கும்போது உடனடி 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் கேமிங் போன்

ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் கேமிங் போன்

ஆசஸ் ராக் போன் 3 ஸ்மார்ட்போன் மூன்றாம் ஜென் ஃபிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போனாகும். இது ஸ்னாப்டிராகன் 865 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் 10 பிட் எச்டிஆர் அமோலேட் டிஸ்பிளேவுடன் வருகிறது.

2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

Asus ROG போன் 3 சிறப்பம்சம்

Asus ROG போன் 3 சிறப்பம்சம்

  • 6.59' இன்ச் முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
  • 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz டச் சாம்பலிங் வீதத்துடன் டிஸ்பிளே
  • அட்ரினோ 650 ஜி.பீ.யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • மூன்று கேமரா அமைப்பு

    மூன்று கேமரா அமைப்பு

    • 64 மெகாபிக்சல் சோனி IMX686 சென்சார்
    • 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
    • 5 மெகாபிக்சல் மேக்ரோ
    • 24 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
    • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    • அல்ட்ரா சோனிக் சென்சார் கொண்ட ஏர்டிரிகர் 3 மற்றும் கிரிப் பிரஸ் அம்சம்
    • 6000எம்ஏஎச் பேட்டரி

      6000எம்ஏஎச் பேட்டரி

      ஆசஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5 ஜி, 4 ஜி வோல்டிஇ, ப்ளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 3 Gets Price Cut in India and Extra Discount During Flipkart Big Diwali Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X