சும்மா இல்ல ரூ.7000 தள்ளுபடி- ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 வாங்க சரியான நேரம்: குறுகிய நாட்கள் மட்டுமே!

|

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பில் அனைத்து தயாரிப்பு வகைகளுக்கும் பல தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. இதில் பிரபலமான ஸ்மார்ட்போன்களையும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

சும்மா இல்ல ரூ.7000 தள்ளுபடி- ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 வாங்க சரியான நேரம்!

ஆசஸ் சாதனங்கள் பொதுவாகவே கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக வசதியோடு வருகிறது. ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 தற்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை மூலம் வாங்கலாம். காரணம் இந்த சாதனத்துக்கு ரூ.7000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு அறிமுகமான ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.46,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.39,999 என விற்பனைக்கு வருகிறது. ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை மூலம் ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கூடுதல் சலுகையும் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்கள் மூலம் வாங்கும்போது ரூ.750 வரை 10% தள்ளுபடி கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி, 1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆசஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

5 ஜி, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 6x பெரிய ஹீட்ஸிங்க், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காப்பர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம் ஆகியவற்றை வழங்கும் சமீபத்திய கேம்கூல் 3 வெப்ப-சிதறல் அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. சுருக்கமாக கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ROG Phone 3 Gets Massive Discount in Flipkart Big Saving Days Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X