இந்தியா: 12ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ரோக் போன் 3.!

|

அசுஸ் நிறுவனம் அன்மையில் தனது ரோக் போன்3 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரோக் போன்3 ஆகஸ்ட் 6-ம் தேதி விற்பனைக்கு வந்த நிலையில். இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட
மாடல் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றுவடிவமைப்பு

6x பெரிய ஹீட்ஸிங்க், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காப்பர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம் ஆகியவற்றை வழங்கும் சமீபத்திய கேம்கூல் 3 வெப்ப-சிதறல் அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. மேலும் தனித்துமான வடிமைப்பு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோக் போன் 3 மாடல்

அசுஸ் ரோக் போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி,1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இனி நிலநடுக்கம் வந்தால் கூகுள் எச்சரிக்கும்: அட்டகாச ஆண்ட்ராய்டு அம்சம்!இனி நிலநடுக்கம் வந்தால் கூகுள் எச்சரிக்கும்: அட்டகாச ஆண்ட்ராய்டு அம்சம்!

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போன் 3 சாதனத்தில் மிகவும்

அசுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 3 ஸ்மார்ட்போனின் பின்புறம்

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச்

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம்

5 ஜி, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 8ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது, பின்பு 12ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை ரூ.57,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M01s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X