அசுஸ் ROG Phone 2 அடுத்த விற்பனை அக்டோபர் 8.! விலை மற்றும் விபரங்கள்.!

|

அசுஸ் நிறுவனத்தின் ROG Phone 2 ஸ்மார்ட்போன் மாடல் இன்று விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களில் ROG Phone 2 (8ஜிபி ரேம் )விற்று முடிந்துவிட்டன. மேலும் அடுத்த விற்பனை வரும் அக்டோபர் 8-ம் தேதி பிளிப்கார்ட்
தளத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் ROG Phone 2

அசுஸ் ROG Phone 2

குறிப்பாக சற்று உயர்வான விலையில் அசுஸ் ROG Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு கேமர்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துளளது. மேலும் 18வாட் மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவருவதால் சார்ஜ் பற்றிய கவலை கண்டிப்பாக இருக்காது.

அசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே

அசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே

அசுஸ் ROG Phone 2 பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது. மேலும் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை: மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி : ஆப் மூலம் நேரத்தைமுன் பதிவு செய்யலாம்.!சென்னை: மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி : ஆப் மூலம் நேரத்தைமுன் பதிவு செய்யலாம்.!

 தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம்.

மெர்சலான டூயல் கேமரா:

மெர்சலான டூயல் கேமரா:

அசுஸ் ROG Phone 2 சாதனத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள்இடம்பெற்றுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ரூ.23 கோடி மதிப்புள்ள மீனைப் பிடித்த மீனவர்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?ரூ.23 கோடி மதிப்புள்ள மீனைப் பிடித்த மீனவர்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999(18வாட் சார்ஜர் ஆதரவு)
12ஜிபி ரேம் மற்றும் 52ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999(30வாட் சார்ஜர் ஆதரவு)

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 2 next sale on October 8 and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X