வாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!
அசுஸ் நிறுவனம் தரமான மற்றும் பாதுகாப்பு வசதி கொண்ட அசுஸ் ROG Phone 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த அசுஸ் ROG Phone இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

அசுஸ் ROG Phone 2
குறிப்பாக சற்று உயர்வான விலையில் அசுஸ் ROG Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் விலைக்குதகுந்த பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு கேமர்களுக்கு தகுந்தபடி
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துளளது. மேலும் 18வாட் மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த சாதனம்வெளிவருவதால் சார்ஜ் பற்றிய கவலை கண்டிப்பாக இருக்காது.

வரும் 30-ம் தேதி
மேலும் வரும் 30-ம் தேதி முதல் இந்த அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்ப்போம்.

அசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே
அசுஸ் ROG Phone 2 பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம்.

மெர்சலான டூயல் கேமரா:
அசுஸ் ROG Phone 2 சாதனத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள்இடம்பெற்றுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பிடைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999(18வாட் சார்ஜர் ஆதரவு)
12ஜிபி ரேம் மற்றும் 52ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999(30வாட் சார்ஜர் ஆதரவு)


Click it and Unblock the Notifications








