Home
Mobile

நவீன வசதியினை வழங்கும் மின்னணு சாதனங்களின் ஒப்பீடு!

நவீன வசதியினை வழங்கும் மின்னணு சாதனங்களின் ஒப்பீடு!

ஆசஸ் பேட்போன-2 மற்றும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் எலக்ட்ரானிக் சாதனத்தில் இருக்கும் சிறப்பான வசதி பற்றிய விவரங்களை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட பேட்போன்-2 எலக்ட்ரானிக் சாதனம் 135 கிராம் எடை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 180 கிராம் எடையினை கொண்டதாக இருக்கும். பேட்போன்-2 திரையினை

பொருத்தளவில் 4.2 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை வசதியனை வழங்கும். இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

பேட்போன்-2வை காட்டிலும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டின் திரை சற்று பெரியதாக இருக்கும் என்று கூறலாம். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 5.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதிலும் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டவை இந்த 2 எலக்ட்ரானிக் சாதனங்களும் என்று குறிப்பிடப்படுகிறது. அத்தகைய இந்த எலக்ட்ரானிக் சாதனங்களின் இயங்குதளம் பற்றிய தகவல்களையும் பார்த்தாக வேண்டும். பேட்போன்-2வில்ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை பெறலாம். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பயன்படு்த்தலாம்.

13 மெகா பிகஸ்ல் கேமராவினை இந்த பேட்போன்-2வில் சிறப்பாக பெறலாம். அதோடு வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் 1.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் பயன்படுத்தலாம்

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் எளிதாக பயன்படுத்தலாம். இதிலும் 2 கேமராக்களின் வசதியினை பெற முடியும். பேட்போன்-2, கேலக்ஸி நோட்-2 ஆகிய இந்த 2 எலக்ட்ரானிக் சாதனங்களிலும் 16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளையும் சிறப்பாக பெற முடியும்.

இந்த இரண்டு மின்னணு சாதனங்களும் 3ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் 2,140 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினை பேட்போன்-2விலும், கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் 3,100 லித்தியம் அயான் பேட்டரியினையும் பெறலாம். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் ரூ. 39,990 விலையினை கொண்டதாக

இருக்கும். பேட்ஃபோன்-2வின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.

இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்...

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X