Home
Mobile

டூயல் கேம்; 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அசுஸ் சென்போன் ஸூம் எஸ்.!

ஆட்டோஃபோகஸ் அம்சம் ஆனது 0.03 விநாடிகலுக்குள் போகஸ் செலுத்த அனுமதிக்கிறது.

By Muthuraj

அசுஸ் நிறுவனம் அதன் சென்போன் ஸூம் எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க சந்தையில் கடந்த மே மாதத்தில் இந்த சாதனம் சென்போன் 3 ஸூம் என்ற பெயரில் முதன் முதலாக வெளியிடப்பட்டது. சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல உயர் இறுதி கேமரா அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் தன்னுள் கொண்டுள்ளது.

கேமரா பற்றி பேசுகையில், அசுஸ் சென்போன் ஸூம் எஸ் ஆனது பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வருகிறது மற்றும் இரண்டு சென்சார்களுமே 12எம்பி தீர்மானம் கொண்டுள்ளது. ஒரு 12எம்பி சென்சார் ஆனது எப்/ 1.7 துளை அளவு கொண்டது மற்றும் ஐஎம்எக்ஸ்362 சென்சார் கொண்டுள்ளது. மற்றது 2.3X அளவிற்கு ஆப்டிகல் ஸூம் செயல்பாடு கொண்டு வருகிறது.

கூடுதலான ஆதரவு

கூடுதலான ஆதரவு

பயனர்களுக்கான இமேஜிங் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் - ஒளியியல் பட உறுதிப்படுத்தல் (OIS) மற்றும் மின்னணு பட உறுதிப்படுத்தல் ஆகியவை கூடுதலான ஆதரவுகளையும் இக்கருவி வழங்குகிறது. மேலும் ஆட்டோஃபோகஸ் அம்சம் ஆனது 0.03 விநாடிகலுக்குள் போகஸ் செலுத்த அனுமதிக்கிறது.

கேமரா

கேமரா

பின்புறத்தில் உள்ள இரண்டாவது கேமரா ஆனது லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் பொருள்-கண்காணிப்பு ஆட்டோஃபோகஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது பயனர்களுக்கு படங்களையும் வீடியோக்களையும் படப்பிடிப்பு செய்யும் போது புதியதொரு அனுபவத்தை வழங்கும். இதற்கிடையில், முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் - எப்/ 2.0 துளை மற்றும் ஐஎம்எக்ஸ்214 சென்சார் உடனான ஒரு 13எம்பி கேமரா கொண்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

அசுஸ் சென்போன் ஸூம் எஸ் ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகளை பார்த்தால், இது ஒரு 5.5 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. திரையில் ஒரு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் பெறுகிறது. இது முந்தைய பதிப்பை விட மிகவும் அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது என மதிப்பிடப்படுகிறது.

2டிபி அளவிலான சேமிப்பு

2டிபி அளவிலான சேமிப்பு

அதிகபட்ச செயல்திறனை வழங்கும் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 செயலி உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயங்கும் இக்கருவி 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பையும், மைக்ரோ ஸ்லாட் வழியாக நம்பமுடியாத 2டிபி அளவிலான சேமிப்பு ஆதரவையும் வழங்குகிறது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ஒரு பெரிய 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இக்கருவி 170 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது என்பதும் மற்றும் இதன் பேட்டரி நம்பமுடியாத 42 நாட்கள் காத்திருப்பு நேரத்தை மற்றும் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக 4கே வீடியோக்களை தொடர்ந்து பதிவும் செய்யும் ஆதரவை வழங்குவதாகவும் நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.26,999/- என்ற விலை

இந்தியாவில் ரூ.26,999/- என்ற விலை

உடன் மற்றொரு ஸ்மார்ட்போனிற்கு பேட்டரி தேவைப்படும் போது இதையொரு பவர் பேங்க் ஆகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். க்ளேசியர் சில்வர் மற்றும் நேவி ப்ளூ ஏன இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த புதிய அசுஸ் சென்போன் ஸூம் எஸ் ஆனது இந்தியாவில் ரூ.26,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Asus launches ZenFone Zoom S in India with dual camera and massive 5000 mAh battery. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X