வாங்குனா இந்த போன வாங்கணும்: ROG Phone.!
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தும் ஒரு அம்சம் விளையாட்டு(கேமிங்), அதற்கு தகுந்தபடி அசுஸ் நிறுவனம் இப்போது அருமையான ஸ்மார்ட்போன் மாடலை சந்தைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் என்னவென்றால்ROG Phone என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை டிவியுன் இணைந்து பல்வேறு மொபைல் விளையாட்டுகளை நீங்கள் செயல்படுத்த முடியும். மேலும் டிவியுடன் ROG Phone-ஐ பயன்படுத்தும் போது சிறந்த அனுபவம் கொடுக்கும்.

ROG Phone பொதுவாக பல்வேறு மொபைல் விளையாட்டுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் 90ஹெர்ட்ஸ் ரேட் வேகமான டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் 11 மிமீ தடிமன் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் பேட் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது
அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகொண்ட ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது, மொபைல் விளையாட்டுக்கு தகுந்தபடி இந்த ஸ்பீக்கர் உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ROG Phone பொதுவாக 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160x1080 பிக்சல்
திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு ஆசஸ் ஆர்ஜிபி லைட்டிங்-ஐ இந்த சாதனத்தில்
பயன்படுத்த முடியும்.

ஸ்னாப்டிராகன் 845:
இந்த ROG Phoneசாதனத்தில் 2.96ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு சிறந்த வேகம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதால் பயன்படுத்த அருமையாக இருக்கும் என்று அசுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24-பிட் ஆடியோ:
ROG Phone ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 24-பிட் ஆடியோ வசதி மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20அசுஸ் ஹைப்பர் சார்ஜ் திறமையுடன் இக்கருவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சேமிப்பு:
இந்த சாதனம் 8ஜிபி ரேம் வசதி மற்றும் 12ஜிபி உள்ளடக்க மெரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ROG Phone சாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக்
கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
இந்த ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவிரங்கள் வெளியிடப்படவில்லை, இருந்தபோதிலும் இந்த சாதனத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications