குறைந்த விலையில் ஏசஸ் நிறுவனத்தின் முதல் தலைமுறை ஸ்மார்ட் வாட்ச்

By Meganathan
|

கணினி தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் தைவான் நாட்டின் ஏசஸ் நிறுவனம், மொபைல் போன் மற்றும் டேப்லட் விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றது என்பதோடு ஏசஸ் அணியக்கூடிய சாதனங்களையும் தயாரிக்க இருக்கின்றது.

கூகுளின் ஆன்டிராய்டு வியர் ஓ.எஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச் நெக்சஸ் 7 அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அணியக்கூடிய சாதனங்களை தயாரிக்கும் சந்தையில் ஏசஸ் நிறுவனம் அறிமுகமாகிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

குறைந்த விலை ஏசஸ் ஸ்மார்ட் வாட்ச்

அடுத்த மாதம் ஏசஸ் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஜெர்ரி ஷென் தெரிவித்திருப்பதாக போகஸ் தாய்வானின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியாக இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் குறித்து எந்த தகவல்களும் வெளியாகாத நிலையில் ஏசஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

ஏசஸின் முதல் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை அதிகம் இருக்காது என்றும் சர்வதேச சந்தையில் அதன் விலை ரூ.6000 க்கும் குறைவாகவே இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. ஏசஸின் முதல் தலைமுறை ஸ்மார்ட் வாட்ச்களின் விலையை பொருத்த வரை பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Asus smartwatches to be launched in september for the price below Rs.6000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X