அடுத்த வாரம் பேட்போன் 2ஐ அறிமுகம் செய்யும் ஆசஸ்

Posted By: Karthikeyan
அடுத்த வாரம் பேட்போன் 2ஐ அறிமுகம் செய்யும் ஆசஸ்

ஆசஸ் நிறுவனம் தனது புதிய பேட்போன் 2 சாதனத்தை உளக அளவில் அறிமுகம் செய்ய வரும் அக்டோபர் 16ல் தைபையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கு முன்பாகவே இந்த பேட்போன் 2ன் படங்களை ஆசஸின் தலைமை இயக்குனர் ஜெரி ஷென் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த பேட்போன் 2 சாதனம் 4.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளேயுடன் வருகிறது. அதோடு க்வாட் கோர் ப்ராசஸர் மற்றும் 13எம்பி பின்பக்க கேமராவையும் இந்த பேட்போன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டின் பின்புறம் ஒரு ஸ்மார்ட்போன் டோக்கும் உள்ளது.

இந்த டோக்கில் பேட்போன் 2ஐ வைத்துக் கொள்ளலாம். அதோடு அந்த டோக்கிலிருந்து இந்த பேட்போன் 2ஐ தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். கடந்த மாதம்தான் ஆசஸ் தனது பேட்போனை இந்தியாவில் மட்டும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பேட்போன் ரூ.64,999க்கு விற்கப்படுகிறது.

சரியாக ஒரு மாதம் கழித்து ஆசஸ் தனது பேட்போன் 2ஐ அடுத்த வாரம் உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறது. இந்த ஆசஸின் புதிய சாதனத்திற்கு உலக அளவில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot