ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அசத்தலான அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
அசுஸ் நிறுவனம் புதிய அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஆப்பிள் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அசுஸ் 8Z ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் மார்ச் 7-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அசுஸ் 8Z ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் மாடலை ரூ.42,999-விலையில் வாங்க முடியும். பின்பு குறிப்பாக பிளிப்கார்ட்தளத்தில் வரும் வரும் மார்ச் 7-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். ஹொரைசன் சில்வர் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் இந்தஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக அசுஸ் 8Z ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளது. பின்பு ZenUI 8 சார்ந்த
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய அசுஸ் 8Z ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

அசுஸ் 8Z ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Sony IMX686 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 செகண்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அசுஸ் 8Z ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 30 வாட் பாஸ்ட்
சார்ஜிங் வசதி, மூன்று மைக்ரோஃபோன்கள் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை வெளிவந்துள்ளது இந்த அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications