அசுஸ் 8 இசட் இந்தியாவில் அறிமுகம்.. அசுஸ் ஜென்போன் 8 பிலிப் மாடல் பற்றிய விபரங்கள் இதோ..
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அசுஸ் 8 இசட் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அசுஸ் 8 இசட் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கும், இது Asus ROG Phone 5S மற்றும் ROG Phone 5S Pro ஆகியவற்றிலிருந்து சிறிது தூரம் வெளிச்சத்திற்கு வரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய அசுஸ் 8 இசட் பற்றி வெளியான தகவலை பார்க்கலாம்.

அசுஸ் 8 இசட் ஸ்மார்ட்போனின் அறிமுக நாள் மற்றும் விபரம்
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் Asus 8Z ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை வரும் பிப்ரவரி 28, 2022 ஆம் தேதி அன்று திட்டமிட்டுள்ளது. முன்னதாக, அசுஸ் நிறுவனம் இந்த சாதனத்தை ஆகஸ்ட் 2021 இல் இந்தியாவிற்கு கொண்டு வர இருந்தது. இருப்பினும், உலகளாவிய தொற்றுநோய் காரணமாக, எல்லாமே மந்தமடைந்தது மற்றும் அசுஸ் 8 இசட் சாதனம் இந்திய நாட்டில் திட்டமிட்டபடி அறிமுகம் செய்யப்பட முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது நிறுவனம் அசுஸ் 8 இசட் அறிமுகத்திற்கு தயாராகிவிட்டது.

இந்த ஸ்மார்ட்போனுடன் இணையற்ற செயல்திறனை வழங்கும் ஆசஸ்
இந்த கச்சிதமான அசுஸ் 8 இசட் ஸ்மார்ட்போன் அதன் பயனர்களுக்கு இணையற்ற அனுபவத்தை அளிக்கும் என்று ஆசஸ் கூறியுள்ளது. இது Flipkart இல் ஆன்லைனில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டீஸர் ஸ்மார்ட்போன் குறித்த அதிக விவரங்களைத் தரவில்லை என்றாலும், சில முக்கிய விபரங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து டீஸ் செய்துள்ளது.

Asus Zenfone 8 ஸ்மார்ட்போன் விபரங்கள்
இருப்பினும், Asus Zenfone 8 இன் உலகளாவிய மாறுபாடு ஏற்கனவே வெளிவந்துவிட்டதால், நம்மால் கூடுதல் கணிப்பை கணிக்க முடிகிறது. Asus Zenfone 8 ஆனது அதே உலகளாவிய சந்தையில் 5.9' இன்ச் கொண்ட சாம்சங் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிஸ்பிளே அதிகபட்சமாக 1100 nits பிரகாசம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் இந்தியாவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் HDR10+ சான்றிதழால் பாதுகாக்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அறிமுகமும் புதிய சாதனம்
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் இணைந்து 16 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரியுடன் 30W வேகமாக சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 64 எம்பி சோனி IMX686 முதன்மை சென்சார் மற்றும் 12 எம்பி சோனி IMX363 இரண்டாம் நிலை சென்சார் உடன் இரட்டை கேமரா அமைப்பு இருக்கலாம். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்கான 12 எம்பி சோனி IMX663 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

என்ன விலையில் இந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்?
சர்வதேச சந்தையில் இதன் விலை சுமார் EUR 599 என்ற புள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனத்தின் விலை இந்திய மதிப்பின் படி சுமார் 50,000 ரூபாயாக இருக்கலாம். இது சமீபத்தில் தொடங்கப்பட்ட OnePlus 9RT மற்றும் iQOO 9 தொடர்களுக்கான போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் இதே சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படுமா அல்லது வேறு சில மாற்றங்கள் உடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications