இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.!
இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்ற அசுஸ் 6Z ஸ்மார்ட்போன மாடல் இன்று பிளிப்கார்ட் வலைதளத்தின் வழியே விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

அசுஸ் 6Z என்று பெயர் மாற்ற இதுதான்
டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி, ஜென் மற்றும் ஜென்போன் என்ற முத்திரையுடன் உள்ள பொருட்களுக்கு இந்தியாவில் விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. இதனால் அசுஸ் ஜென்போன் 6 என்று வெளியிடப்பட வேண்டிய இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் 6Z என்ற பெயர் மாற்றப்பட்டு இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ், சாம்சங் & ரெட்மியுடன் நேரடி போட்டி
ஒன்பிளஸ் 7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி S10 மற்றும் சியோமி ரெட்மிக் ஸ்மார்ட்போன்களுடன் நேரடி போட்டியில் இந்த அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது. அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் நோ நாட்ச் டிஸ்பிளே, ஃபிலிப் அப் கேமரா, குவாள்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும்
5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அட்டகாசமாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் விலை விபரம்
அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் 6ஜி ரேம்/ 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.31,999 என்ற விலையிலும், அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் 6ஜி ரேம்/ 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.34,999 என்ற விலையிலும் மற்றும் அதன் 8ஜிபி ரேம்/ 256 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.39,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஜூன் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அசுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
- 6.4' இன்ச் உடன் கூடிய 2340x1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் நானோ எட்ஜ் நோ-நாட்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
- குவாள்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- கிரியோ 485 CPU கோர் மற்றும் அட்ரீனோ 640 GPU
- ஆண்ட்ராய்டு 9 பை - 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உடன் கூடிய டூயல் எல்இடி பிளாஷ்
- 13 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- டூயல் ஃபிலிப் அப் மோட்டாரைஸ்டு கேமரா
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- டூயல் மைக்
- குயிக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications