Home
Mobile

உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z.! ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி!

அசுஸ் நிறுவனம், அசுஸ் 6Z (Asus 6Z) என்ற புதிய மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தியில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் மாடலை அசுஸ் நிறுவனத்தின் தலைவர் ஜானி ஷிஹ் அறிமுகம் செய்து வைத்தார்.

அசுஸ் 6Z என்று பெயர் மாற்ற இதுதான் காரணம்

அசுஸ் 6Z என்று பெயர் மாற்ற இதுதான் காரணம்

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி, ஜென் மற்றும் ஜென்போன் என்ற முத்திரையுடன் உள்ள பொருட்களுக்கு இந்தியாவில் விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. இதனால் அசுஸ் ஜென்போன் 6 என்று வெளியிடப்பட வேண்டிய இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் 6Z என்ற பெயர் மாற்றப்பட்டு இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ், சாம்சங் & ரெட்மியுடன் நேரடி போட்டி

ஒன்பிளஸ், சாம்சங் & ரெட்மியுடன் நேரடி போட்டி

ஒன்பிளஸ் 7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி S10மற்றும் சியோமி ரெட்மிக் K20 ஸ்மார்ட்போன்களுடன் நேரடி போட்டியில் இந்த அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது. அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் நோ நாட்ச் டிஸ்பிளே, ஃபிலிப் அப் கேமரா, குவாள்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அட்டகாசமாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் விலை விபரம்

அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் விலை விபரம்

அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் 6ஜி ரேம்/ 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.31,999 என்ற விலையிலும், அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் 6ஜி ரேம்/ 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.34,999 என்ற விலையிலும் மற்றும் அதன் 8ஜிபி ரேம்/ 256 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.39,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஜூன் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அசுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

- 6.4' இன்ச் உடன் கூடிய 2340x1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் நானோ எட்ஜ் நோ-நாட்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
- குவாள்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- கிரியோ 485 CPU கோர் மற்றும் அட்ரீனோ 640 GPU
- ஆண்ட்ராய்டு 9 பை
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உடன் கூடிய டூயல் எல்இடி பிளாஷ்
- 13 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா


- டூயல் ஃபிலிப் அப் மோட்டாரைஸ்டு கேமரா
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- டூயல் மைக்
- குயிக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000 எம்.ஏ.எச் பேட்டரி

ரூ.99 சிறப்பு சலுகை

ரூ.99 சிறப்பு சலுகை

புதிய அசுஸ் 6Z ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் தளத்தில் ஜூன் 26 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் டிவிலைட் சில்வர் என்று இரண்டு நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. துவக்க விற்பனை சலுகையாக இணையதளம் மூலம் வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வெறும் ரூ.99 விலையில் முழு காப்பீடும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus launched Asus 6Z with world's first flip up camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X