உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் அசுஸ் 6Z இப்பொழுது விற்பனை!

|

அசுஸ் நிறுவனம், அசுஸ் 6Z (Asus 6Z) என்ற புதிய மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இந்த புதிய அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் மாடலை அசுஸ் நிறுவனத்தின் தலைவர் ஜானி ஷிஹ் அறிமுகம் செய்து வைத்தார்.

உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் அசுஸ் 6Z இப்பொழுது விற்பனை!

இந்த ஸ்மார்ட்போனின் முதற்கட்ட விற்பனை இன்று பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது.

 அசுஸ் 6Z பெயர் காரணம்

அசுஸ் 6Z பெயர் காரணம்

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி, ஜென் மற்றும் ஜென்போன் என்ற முத்திரையுடன் உள்ள பொருட்களுக்கு இந்தியாவில் விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. இதனால் அசுஸ் ஜென்போன் 6 என்று வெளியிடப்பட வேண்டிய இந்த ஸ்மார்ட்போன் மாடல், அசுஸ் 6Z என்ற பெயர் மாற்றப்பட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

<span style=டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!" title="டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!" loading="lazy" width="100" height="56" />டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

ஃபிலிப் அப் கேமராவுடன் அசுஸ் 6Z

ஃபிலிப் அப் கேமராவுடன் அசுஸ் 6Z

அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் நோ நாட்ச் டிஸ்பிளே, ஃபிலிப் அப் கேமரா, குவாள்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அட்டகாசமாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

<span style=சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!" title="சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!" loading="lazy" width="100" height="56" />சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

அசுஸ் 6Z வேரியண்ட் மற்றும் விலை விபரம்

அசுஸ் 6Z வேரியண்ட் மற்றும் விலை விபரம்

அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் 6ஜி ரேம்/ 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.31,999 என்ற விலையிலும், அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் 6ஜி ரேம்/ 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.34,999 என்ற விலையிலும் மற்றும் அதன் 8ஜிபி ரேம்/ 256 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.39,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் இன்று முதல் விற்பனையை அசுஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.

<span style=ரஷ்யாவுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் ஒப்பந்தம்!" title="ரஷ்யாவுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் ஒப்பந்தம்!" loading="lazy" width="100" height="56" />ரஷ்யாவுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் ஒப்பந்தம்!

அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

  • 6.4' இன்ச் உடன் கூடிய 2340x1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் நானோ எட்ஜ் நோ-நாட்ச் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
  • குவாள்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
  • கிரியோ 485 CPU கோர் மற்றும் அட்ரீனோ 640 GPU
  • ஆண்ட்ராய்டு 9 பை
  • 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
  • எஸ்.டி கார்டு மூலம் 2 டிபி வரையிலான சேமிப்பு வசதி
  • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உடன் கூடிய டூயல் எல்இடி பிளாஷ்
  • 13 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
  • டூயல் ஃபிலிப் அப் மோட்டாரைஸ்டு கேமரா
  • டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • டூயல் மைக்
  • குயிக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 5000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Asus 6Z launch sales started in Flipkart with new Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X