அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் வலைதளத்தில் அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்மையில்இந்நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் 6இசெட் ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

அசுஸ் 5இசெட் விலைகுறைப்பு
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் மாடலுக்கு ரூ.2000-விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்ஃபோன் 5இசெட் டிஸ்பிளே
அசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 2246*1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6ஜிபி /8ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அசுஸ் சென்ஃபோன் 5இசெட் கேமரா:
அசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ஃபோன் 5இசெட் பேட்டரி:
இந்த போனில் 3300எம்ஏஹெச் பேட்டரி, வை-பை802 11 ஏ/ஜி/என்/ஏசி ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், யுஎன்சி, யுஎஸ்பி ஓடிஜி, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications