Home
Mobile

சிங்கிள்-ஆ.. கெத்து-ஆ.! சொன்னதை செய்த NOKIA.. இந்த ஒரு மாடல் போதும்.. மொக்கைனு சொன்னவங்கள துவம்சம் பண்ண!

கசப்பான உண்மை என்னவென்றால், நோக்கியாவின் பீச்சர் போன்கள் (NOKIA Feature Phones) அளவிற்கு நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களால் (NOKIA Smartphones) பிரபலம் அடைய முடியவில்லை; வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற முடியவில்லை. அதற்காக நோக்கியாவின் எல்லா ஸ்மார்ட்போன்களையுமே "மொக்கை" என்று முத்திரை குத்திவிட முடியாது!

நோக்கியாவின் சில குறிப்பிட்ட மாடல்கள் சியோமி (Xiaomi), ரெட்மி (Redmi), ஒப்போ (Oppo), ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும்படியான விலை மற்றும் அம்சங்களுடன் வெளியாகின. அந்த பட்டியலில் நோக்கியா ஜி11 பிளஸ் (Nokia G11 Plus) ஸ்மார்ட்போனிற்கு ஒரு முக்கியமான இடமுண்டு!

சொன்னதை செய்த NOKIA.. இந்த ஒரு மாடல் போதும்!

ஏனென்றால் ரூ.10,000 என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் எவருமே.. சிங்கிள் ஆக, கெத்து ஆக நிற்கும் இந்த ஸ்மார்ட்போனை சந்திக்க நேரிடும். இதற்கிடையில், நோக்கியா ஜி11 பிளஸை அறிமுகம் செய்த போது. இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதி ஒன்றை நோக்கியா நிறுவனம் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் நோக்கியா ஜி11 பிளஸ் ஆனது இன்னும் பலமான போட்டியாளராக உருமாறியுள்ளது!

நோக்கியா ஜி11 பிளஸின் இந்திய அறிமுகத்தின் போது, இந்த மாடல் 2 ஓஎஸ் வெர்ஷன்களுக்கான அப்டேட்களை (2 OS Version Updates ) பெறும் என்று உறுதியளிக்கப்பட்டு இருந்தது. கூறியது போலவே, தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு லேட்டஸ்ட் ஏப்ரல் 2023 ஆண்ட்ராய்டு 13 அப்டேட் (Latest April 2023 Android 13 Update) கிடைக்க தொடங்கி உள்ளது.

செக்யூரிட்டி பேட்சஸ் (Security patches) மற்றும் சில புதிய அம்சங்கள் மற்றும் விஷூவல் மாற்றங்களுடன் (Visual changes) வரும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் ஆனது பில்ட் வெர்ஷன் வி2.420-ஐ கொண்டுள்ளது மற்றும் 2.4ஜிபி என்கிற அளவிலான டவுன்லோட் சைஸை (Download Size) கொண்டுள்ளது.

உங்கள் கையில் இருக்கும் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு இந்த அப்டேட் கிடைத்து இருக்கிறதா என்பதை சரிபார்க்க, உங்கல் போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்பிற்கு செல்லவும். பின்னர் சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) விருப்பம் தோன்றும் வரை கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்; பின்னர் வந்துள்ள அப்டேட்டை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்!

ஒருவேளை நீங்கள் ஒரு நல்ல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை (Budget Price Smartphone) தேடிடுகிறீர்கள் என்றால், நோக்கியா ஜி11 பிளஸை வாங்கலாம் என்கிற யோசனை உங்களுக்குள் உதித்திருந்தால்.. நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம், முக்கிய அம்சங்கள், கலர் ஆப்ஷன்ஸ் மற்றும் விற்பனை விவரங்கள் இதோ:

நோக்கியா ஜி11 பிளஸ் மாடலானது ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையாகும். இது நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் ஸ்டோர்ஸ் வழியாக வாங்க கிடைக்கிறது. இது லேக் ப்ளூ மற்றும் சார்கோல் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஆக்டா கோர் யூனிசாக் டி606 சிப்செட், 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
As Promised Nokia G11 Plus Smartphone Starts Receiving Latest Android 13 OS Update in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X